இனிய புத்தாண்டே
வருக!!!
கைகளில் தவழும்
குழந்தையாய்
காத்திருக்கிறேன்
அன்போடு
நேற்றைக்கு (2024)
விட்டுச்சென்ற
காலநினைவுகளின்
பூ சாரலின்
கனவுகளாய்ப்
பூத்திருக்கிறாய் நீ.....
ஒரு நாள்
திருநாள் அல்ல
உன் முகம்
பார்த்தே என் 365 நாட்களும்
கனவுகளிலிருந்து
விழித்தெழும்....
எட்டு திக்கும்
ஏக்கங்கள் தான்
காலங்கள் மாறாத
எனச் சில கனவுகளுக்காக
சுட்டும்
திசையெல்லாம் விடைகான
சுடர் விடும்
தீபமாய்
இடர் களைந்து
இன்னல் களைந்து இருள் நீக்கி
படரட்டும்
வாழ்வில் மகிழ்ச்சி!!!
தொடரட்டும் இராஜாவாய்
வெற்றி கீர்த்திகள்
பாடட்டும்
வெற்றியின் கீர்த்தனைகள்!!.
No comments:
Post a Comment